EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கர்ப்பிணிகள் தர்பூசணி விதைகளை சாப்பிடலாமா?

கர்ப்பிணிகள் தர்பூசணி விதைகளை சாப்பிடலாமா?

சித்திரை 10, 2025
வகை: அண்மைய செய்திகள், ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கோடை காலத்தில் நமக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் நிறைய தண்ணீர் இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாது. தர்பூசணியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. எனவே அதை சாப்பிடுவதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணியை தினமும் சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் தர்பூசணி விதைகளை சாப்பிடலாம். ஏனெனில் இந்த விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவற்றை பச்சையாகவோ அல்லது வறுத்து சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். மேலும் சாலட்கள், தயிர் மற்றும் சூப்பில் சேர்த்தும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து முளைக்கவைத்து சாப்பிடலாம். இதில் அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன. இருப்பினும், பலருக்கு பச்சை விதைகளை சாப்பிடுவது பிடிக்காது. எனவே, இவற்றை சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்தும் சாப்பிடலாம்.

தர்பூசணி விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் B , மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். .

கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக ரத்த சோகை பிரச்சனை இருக்கும். 50 கிராம் தர்பூசணி விதைகளில் தோராயமாக 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு தினமும் குறைந்தது 2 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால், அவர்கள் தங்கள் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.

மேலும் தர்பூசணி விதைகள் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. ஏனெனில் அதில் விற்றமின் சி, ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே உங்கள் டயட்டில் தாராளமாக தர்பூசணி விதைகளை சேர்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
யாழில் வாளுடன் நடமாடிய நபர் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

மார்கழி 11, 2025
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

மார்கழி 11, 2025
மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

4 நாட்கள் முன்னர்
யாழில்.  நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

யாழில். நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

2 நாட்கள் முன்னர்
புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இரு மாணவர்களின் சடலம் மீட்பு!

யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்  வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

3 நாட்கள் முன்னர்
முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் திட்டம்

முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் திட்டம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In