EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு !

இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு !

சித்திரை 11, 2025
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம்
A A
Share on FacebookShare on Twitter

இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக பதின்ம வயது குழந்தைகளும் கணக்கு தொடங்கி நிர்வகிப்பது அதிகரித்து வருகிறது. இதையடுத்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இணையத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த புதுப்பிப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இனி நேரலை ஒளிபரப்புகளை தொடங்க முடியாது.

அதுமட்டுமின்றி, நேரடியாக வரும் தகவல்களில் இடம்பெற்றிருக்கும் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும்.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது. இதன்மூலம் அவர்கள் ஆபாச படங்களை பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலைகளை குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மெட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினர் கணக்குகள் தொடங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம் உலக அளவில் சுமார் 5.4 கோடி பேர், பதின்ம வயதினருக்கான கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் முதல்கட்டமாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமுல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

குழந்தைகளுக்காக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த பாதுகாப்பு அம்சங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதில் பதின்ம வயது கணக்குகளை இயல்பாகவே தனிப்பட்டதாக அமைத்தல், வெளி நபர்களிடம் இருந்து வரும் தனிப்பட்ட தகவல்களை தடுத்தல், வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், 60 நிமிடங்களுக்கு பிறகு செயலியை விட்டு வெளியேறுவதற்கான நினைவூட்டல்கள் மற்றும் தூங்கும் நேரத்தில் தானாக வரும் அறிவிப்புகளை நிறுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

இந்த பதின்ம வயதினர் கணக்குகளுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் முகநூல் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In