உலகில் சில நாடுகளில் அதிகளவாக நிலஅதிர்வு பதிவாகி வருகின்றது. அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம் மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5.3 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த நில அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் பொருட் சேதம் பற்றி எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.