பத்தரமுல்ல நாடாளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மாலை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதியில் வாகனம் செலுத்துவோரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.





