அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முக்கிய திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக முதல் முறையாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.
இதில், விஜய் மூன்று கதாபாத்திரங்களில் அதாவது வெற்றிமாறன், வெற்றி, டாக்டர் மாறன் ஆகிய கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.
இந்நிலையில், விஜயின் பிறந்தநாள் அன்று விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது, அவரது திரைப்படங்களில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தான் மெர்சல் திரைப்படம்
இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 20 ஆம் திகதி கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதனால் விஜய் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ட்ரீட் ஆக அமைய என்பதும் குறிப்பிடத்தக்கது.