டுபாய் மெரினா பகுதியிலுள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து இடம்பெற்ற கட்டிடத்தில் 764 வீடுகள் அமைந்திருந்ததுடன், இக்குடியிருப்பில் இருந்து 3,820 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டடுள்ளதுடன், இதுவரை எவ்விதமான உயிர்சேதமும் பதிவாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.