EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சீதையம்மன் ஆலய அபிவிருத்திக்ககு அரசு ஒத்துழைப்பு வழங்கும்!

சீதையம்மன் ஆலய அபிவிருத்திக்ககு அரசு ஒத்துழைப்பு வழங்கும்!

ஆவணி 3, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக நுவரெலியா மாவட்டத்தினதும் இந்த நாட்டினதும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அது ஒரு உந்து சக்தியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோக வனம் அனுஸ்ரீ தியாண மண்டபத்தை திறந்து வைத்து இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் ,
சீதையம்மன் ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக காணியை பெற்றுத் தருமாறு ஆலயத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் நாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணியை பெற்றுக் கொடுக்க நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

இன்று இந்த மண்டபத்தை அமைப்பதற்கு முழுமையான நிதி பங்களிப்பை செய்துள்ள இந்தியாவின் டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடும்பத்தினருக்கு எங்களுடைய முழுமையான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

இது உண்மையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய கலாசார உறவை மேம்படுத்துவதற்கு அது உதவியாக இருக்கும்.குறிப்பாக தற்போது எங்கள் நாட்டிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தருகின்றார்கள்.அதிகமானவர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக இங்கு வருகை தருகின்றார்கள்.

சுற்றுலா துறையை பொறுத்த அளவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான வருமானத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.எதிர்வருகின்ற ஆறு மாத காலத்தில் இன்னும் 3.7 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் அரசாங்கம் என்ற வகையில் மேற்கொண்டு வருகின்றோம்.

பொருளாதார ரீதியான பின்னடைந்துள்ள எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நாம் நிச்சயமாக சுற்றுலாத்தறையை அபிவிருத்தி செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.அதன் ஊடாக நாம் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும்.இது காலத்தின் தேவையாகவும் அமைந்துள்ளது.

அதே போல இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த ஆலயத்தின் தலைவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். .அவருடைய அந்த முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதுடன் எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆவணி 24, 2026
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆவணி 24, 2026
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
அண்மைய செய்திகள்

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 24, 2026
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

ஆவணி 24, 2026
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

ஆவணி 24, 2026
யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்
அண்மைய செய்திகள்

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

2 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

3 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In