EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு -புகை படம் எடுக்க தடை!

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு -புகை படம் எடுக்க தடை!

ஆவணி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.

இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும்.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

4. இருபத்தொரு வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்

5. பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

7. பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

1 நாள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

1 நாள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

6 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

4 நாட்கள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In