EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற  உலக பழங்குடியினர் தின நிகழ்வு

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற உலக பழங்குடியினர் தின நிகழ்வு

ஆவணி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று உலக பழங்குடியினர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வானது தம்பான பழங்குடியின அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.

1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் இலங்கையின் பிரதான பழங்குடியினத் தலைவரான விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ கலந்து கொண்டபோது, உலக பழங்குடியினர் தின வைபவத்தை இலங்கையில் கொண்டாடுவது குறித்த கருத்துக்கள் பேசப்பட்டது.

அதன்படி, இலங்கையின் முதல் தேசிய பழங்குடியினர் தின கொண்டாட்டம் 1999ஆம் ஆண்டு கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் நடைபெற்றது.

இதன்படி பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து தேசிய பழங்குடியினர் தின கொண்டாட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்ததுடன், அமைதி மற்றும் சுபீட்சத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்ட பாரம்பரிய “கிரி கொரஹா” சம்பிரதாயம் உட்பட பழங்குடியினரின் தனித்துவமான பல்வேறு கலாசார அம்சங்களுடன் இந்த நிகழ்வு வண்ணமயமாக இருந்தது.

முன்னாள் பழங்குடியின தலைவர் ஊருவரிகே திஸாஹாமியின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தியதோடு இந்த வைபவம் இனிதே ஆரம்பமானது.

மேலும் அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதி வெள்ளை சந்தன செடியையும் நட்டார். இலங்கையின் பிரதான பழங்குடியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, பழங்குடியினரின் பிரச்சினைகள் அடங்கிய ஒரு மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பழங்குடியின தலைவருக்கு அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

பழங்குடியின சமூகத்தினரின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக விற்பனை கூடங்கள் நிர்மாணிக்க ஆரம்பித்தல் மற்றும் பாரம்பரிய அறிவு மற்றும் தேசிய வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இலங்கையில் முதல் பழங்குடியின மூலிகை சவர்க்காரம் “கைரி” அறிமுகப்படுத்தப்பட்டதுடன்,

இந்த வைபவத்தில் ஆயுர்வேத சவர்க்காரத் தயாரிப்பு பயிற்சியை நிறைவு செய்த பழங்குடியின பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் உட்பட கனேடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
அண்மைய செய்திகள்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 23, 2026
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

ஆவணி 23, 2026
பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
இலங்கை

பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 23, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆறாம் நாள் திருவிழா
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆறாம் நாள் திருவிழா

ஆவணி 23, 2026
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்
அண்மைய செய்திகள்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

ஆவணி 23, 2026
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி
அண்மைய செய்திகள்

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

ஆவணி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

21 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

2 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

தலைமன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

7 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

7 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In