வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஏர் கனடா (Air Canada) நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கனடா உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது நுகர்வோர் நலன் சார்ந்த மிக முக்கியமான சட்டப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
விமானப் பயணச்சீட்டு விலைகளை இணையதளத்தில் வெளியிடும் போது, கூடுதல் கட்டணங்களைக் காண்பித்ததாக, அந்த நிறுவ்பனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மொன்ட்ரியலைச் சேர்ந்த மைக்கேல் சைலாஸ் (Michael Silas) என்பவர், இணையதளத்தில் காட்டிய விலையை விட, தான் பயணச்சீட்டு வாங்கும் போது 124 டாலர் கூடுதலாக வசூலிக்கப்பட்டதை அவதானித்துள்ளார்.
கியூபெக் மாகாண நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு சேவையின் முழு விலையையும் ஆரம்பத்திலேயே நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஏர் கனடா நிறுவனம் இந்த விதியை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.






