தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இன்றையதினம் தங்கத்தின் விலை 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 392,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதோடு, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும் உயர்வடைந்துள்ளது.
22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.





