EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

மாசி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும்.

இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள்.

இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது.மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும்.

பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன

இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In