EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடைவு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்த வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் 9 மாதங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் போலி தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடைவு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என சோதனையில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தங்க ஆபரணங்களை அடைவு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்து விசாரித்த போது போலி தங்க ஆபரணங்களை அவரது கணவர் வடிவமைத்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்ததுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகி வந்த போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து வருபவரை பொலிசார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் மதுபான கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவ தினமான நேற்று மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விக்னேஷ் உட்பட குழுவினர் சம்பவ தினமான நேற்று குறித்த மதுபானம் இருந்தும் கடையை முற்றுகையிட்டு கைது செய்தனார்.

இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் தங்க ஆபரணங்கள் வடிவமைப்பு செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிசார், அவரிடம் இருந்து தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் உபகரணங்களை மீட்டதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

2 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

2 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

2 மணத்தியாலங்கள் முன்னர்
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

2 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In