EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ்  அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஆனி 15, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் நகரில் உள்ள ‘மொண்ட்ரியல்-நோர்ட்’ (Montréal-Nord) பிராந்தியப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், சிறுபான்மையினக் கறுப்பின மற்றும் அரபு வம்சாவளி மக்களுக்கு எதிராகக் கொடூரமான இனவெறி மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களில் (Racist and hateful acts) ஈடுபட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மொண்ட்ரியால் நகரின் 39 ஆம் இலக்க காவல் நிலையத்தைச் (Station 39) சேர்ந்த இரவு நேர சிறப்பு ரோந்துப் படை அதிகாரிகள், திட்டமிட்டு கறுப்பின மற்றும் அரபு மக்களை இலக்கு வைத்து இனவெறித் துன்புறுத்தல்களைச் செய்துள்ளதாக, உள்நாட்டுப் புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வீதிகளில் வாகன சோதனைகள் மற்றும் விசாரணைகள் என்ற பெயரில் கறுப்பின மக்களை அநாகரிகமாக வழிமறிக்கும் இந்த அதிகாரிகள், அவர்களின் ‘டிரெட்லாக்ஸ்’ எனப்படும் பாரம்பரியத் தலைமுடியின் சில பகுதிகளைப் பலவந்தமாக வெட்டி, தங்களின் இனவெறிச் செயலின் ‘வெற்றிப் பரிசாக’ (Trophies) சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்துள்ளனர்.

சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தக் குற்றமும் செய்யாத கறுப்பின மற்றும் அரபு இளைஞர்களை நிறத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபடுத்தி, அவர்களுக்கு அடுக்கடுக்கான போலிப் போக்குவரத்து அபராதங்களை (Fines) விதித்து மன உளைச்சலுக்கு   ஆளாக்கியுள்ளனர்.

அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற சில நேர்மையான பொலிஸ் அதிகாரிகளே இந்த அநீதியைக் கண்டு சகிக்க முடியாமல், தமது உயர் அதிகாரிகளுக்கு, இந்த பிரச்சினை குறித்து இரகசியமாகத் தகவல் வழங்கியுள்ளானர். இதனைத் தொடர்ந்து, அந்த சிறப்பு ரோந்துப் படைப் பிரிவு உடனடியாகக் கலைக்கப்பட்டுள்ளாது.

16 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் பொலிஸ் தலைமை அதிகாரி   ஃபாடி டஹர்  (Fady Dagher) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த வன்முறையில் நேரடியாகத் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான ஆவணங்கள் கியூபெக் மாகாண குற்றவியல் மற்றும் தண்டனைத் துறை வழக்கறிஞர்களின் (DPCP) குற்றவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மீதமுள்ள 14 பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் தொடர்பில்லாத வேறு   பிரிவுகளுக்குத்  தற்காலிகமாக  மாற்றப்பட்டுள்ளமை    குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு
கியூபெக்

‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு

ஆனி 15, 2026
கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஆனி 15, 2026
மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 15, 2026
உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’
கியூபெக்

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஆனி 12, 2026
ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்
கியூபெக்

ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்

ஆனி 12, 2026
19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்
கியூபெக்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

3 நாட்கள் முன்னர்
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

1 நாள் முன்னர்
மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

6 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In