தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
இதன்படி புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக 30 – 34 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயணங்களுக்கு 12 சதவீதமும், 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களுக்கு 20 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சொகுசு பேருந்துகளுக்கான கட்டணம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் 100 கிலோமீற்றர் பயணங்களுக்கு 12 சதவீத கட்டணமும், 100 கிலோமீற்றருக்கு 15 சதவீத கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர்.











