EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

ஆவணி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை சுமார் 40 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவத்தில் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண்களில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தை யும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

ஆவணி 21, 2026
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஆவணி 21, 2026
கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 21, 2026
யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்
இலங்கை

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

ஆவணி 21, 2026
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு
அண்மைய செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஆவணி 21, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள்  திருவிழா
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள் திருவிழா

ஆவணி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை

போதைப்பொருள் வழக்கில் இலஞ்சம் பெற்ற 04 பொலிஸார்

4 நாட்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

3 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

4 நாட்கள் முன்னர்
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

3 நாட்கள் முன்னர்
காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In