EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

புரட்டாதி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (15) விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளதுடன், இந்த அறிவிப்பு நாளை செப்டம்பர் 16ஆம் திகதி காலை 10 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் மண்சரிவு முன்னெச்சரிக்கை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புளத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.

அதேவேளை, கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண் வெடிப்புகள், நிலத்தில் திடீர் பிளவுகள், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானமாக இருக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் தொடர்ந்து வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை அவதானித்து, அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர எச்சரிக்கை பதிவில் இன்று காலை 10 மணிக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது
அண்மைய செய்திகள்

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

புரட்டாதி 15, 2026
முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை
அண்மைய செய்திகள்

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

புரட்டாதி 15, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

புரட்டாதி 15, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
அண்மைய செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

புரட்டாதி 15, 2026
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

புரட்டாதி 15, 2026
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு
அண்மைய செய்திகள்

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

புரட்டாதி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
கோஸ்லாந்தையில் விபத்து –  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  உயிரிழப்பு

கோஸ்லாந்தையில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

1 நாள் முன்னர்
மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In