இந்திய திரையுலகின் மூத்த மற்றும் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 94) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், திரையுலகில் தனது விசேட மற்றும் புதுமையான திரைப்பட உருவாக்க உத்திகளுக்காக பெரிதும் போற்றப்பட்டவர்.
குறிப்பாக, உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பேசும் படம்’ (புஷ்பக விமாணம்) மற்றும் ‘ராஜ பார்வை’ போன்ற சிறப்புமிக்க திரைப்படங்களை இயக்கிய பெருமை இவரையே சாரும்.
முழுக்க முழுக்க வசனங்களே இல்லாத ‘பேசும் படம்’ திரைப்படத்தை உருவாக்கி இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.
மேலும், அறிவியல் புனைகதை திரைப்படமான ‘ஆதித்ய 369’ உள்ளிட்ட பல சோதனை முயற்சியிலான திரைப்படங்களையும் அவர் வழங்கியுள்ளார்.
95 வயதிலும் சினிமாவில் துடிப்புடன் இயங்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், கடைசியாக சிங்கீதம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது.
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு திரை உலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.











