EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் தேர்தலில் AI சாட்பாட்கள் தவறான தகவல்களை வழங்கின: சாட்சியமளித்த அரசியல் ஆய்வாளர்கள்

கியூபெக் தேர்தலில் AI சாட்பாட்கள் தவறான தகவல்களை வழங்கின: சாட்சியமளித்த அரசியல் ஆய்வாளர்கள்

ஐப்பசி 10, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் (Quebec) மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த மக்களில் சுமார் 40 சதவீதமானோர் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களைப் பயன்படுத்தியதாகவும், எனினும் அவர்களுக்குப் பல தவறான தகவல்களே கிடைத்திருப்பதாகவும் கனடிய நாடாளுமன்றக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கனடிய நாடாளுமன்றத்தின் கீழ்-அவையின் நடைமுறைகள் மற்றும் விவகாரங்களுக்கான குழு, ஜனநாயக நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து நடாத்திய ஆய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியூபெக் தேர்தல் காலத்தில் சாட்பாட்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஆய்வு மேற்கொண்ட மெக்கில் (McGill) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஏங்கஸ் பிரிட்ஜ்மேன் (Aengus Bridgman) இக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

“கியூபெக்கிலுள்ள பெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்கள், தமது செய்திகளையும் தகவல்களையும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அனுமதி இன்றி பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அணுகல் உரிமைகளை முடக்கியுள்ளன” என ஏங்கஸ் பிரிட்ஜ்மேன் தெரிவித்தார்.

இதன் காரணமாக, AI சாட்பாட்கள் துல்லியமான செய்தி ஆதாரங்களைப் பெற முடியாமல் போயுள்ளதாகவும், நம்பகத்தன்மையற்ற பிற இணையதளங்களைச் சார்ந்து இயங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கியூபெக் தேர்தலின்போது அரசியல் கட்சிகளைப் பரிந்துரைப்பது தொடர்பில் ChatGPT தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டதாகவும், ஒரு நாள் ஒரு கட்சியைப் பரிந்துரைத்தால் மறுநாள் அக்கட்சியைப் பரிந்துரைக்க மறுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மெக்கில் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைப் பள்ளியின் இணைப் பேராசிரியர் டெய்லர் ஓவன் (Taylor Owen) சாட்சியம் அளிக்கையில், “கியூபெக் தேர்தல் பிரசாரத்தின் இறுதி மூன்று வாரங்களில் ChatGPT வழங்கிய வாக்களிப்பு ஆலோசனைகளில் 39 சதவீதமானவை, AI தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட பிழைகள் நிறைந்த பொழுதுபோக்கு இணையதளம் ஒன்றிலிருந்தே பெறப்பட்டிருந்தன” எனச் சுட்டிக்காட்டினார்.

இதில் தனிநபர்களுக்கோ அல்லது சாட்பாட்களுக்கோ எந்தவொரு தீய நோக்கமும் இருக்கவில்லை என்றும், இந்தச் சூழ்நிலையின் காரணமாக பெருவாரியான கியூபெக் மக்கள் தவறான தேர்தல் தகவல்களைப் பெறும் நிலை ஏற்பட்டது என்றும் பேராசிரியர் டெய்லர் ஓவன் விளக்கமளித்தார்.

இந்த சாட்சியங்களுக்குப் பதிலளித்த கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிளேன் கால்கின்ஸ் (Blaine Calkins), “தற்செயலாகவே செயற்கை நுண்ணறிவு மூலமாக இவ்வளவு பெரிய தவறு நடக்குமாயின், யாராவது திட்டமிட்டுச் செய்தால், அதன் ஆபத்து எவ்வாறிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது” எனக் கவலை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் உயரமான கட்டிடத்தில் சிக்கிய இரு தொழிலாளர்கள் மீட்பு
கியூபெக்

மொன்றியலில் உயரமான கட்டிடத்தில் சிக்கிய இரு தொழிலாளர்கள் மீட்பு

ஐப்பசி 10, 2026
மொன்றியலில் ஒக்டோபர் 7 தாக்குதலின் 3ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வு
கியூபெக்

மொன்றியலில் ஒக்டோபர் 7 தாக்குதலின் 3ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வு

ஐப்பசி 8, 2026
பார்ட்டி கியூபெக்வா வெற்றி: அதிரடி நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர்
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா வெற்றி: அதிரடி நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர்

ஐப்பசி 8, 2026
மொண்ட்ரியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் தீ விபத்து
கியூபெக்

மொண்ட்ரியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் தீ விபத்து

ஐப்பசி 8, 2026
கிறிஸ்டின் பிரெஷெட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா
கியூபெக்

கிறிஸ்டின் பிரெஷெட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா

ஐப்பசி 8, 2026
கோட் சென் – லூக்கில் வாகன இலக்கத்தகடு கண்காணிப்பு கேமரா அறிமுகம்
கியூபெக்

கோட் சென் – லூக்கில் வாகன இலக்கத்தகடு கண்காணிப்பு கேமரா அறிமுகம்

ஐப்பசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

5 நாட்கள் முன்னர்
வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

1 நாள் முன்னர்
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

5 நாட்கள் முன்னர்
நெடுந்தீவில் தூர்வாரப்படும்  13 கேணிகள்

நெடுந்தீவில் தூர்வாரப்படும் 13 கேணிகள்

4 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check