EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் டெல்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பொலிஸாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மூன்று பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறித்த ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமாக செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2 ஆம் திகதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரை நோக்கி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பேரணியாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, 3 ஆம் திகதி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்துள்ளது. இதன்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தங்களைத் தவறான முறையில் தொட்டதாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து, குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், நியாயமான விசாரணையை முன்னெடுக்கும் நோக்கில், குறித்த முறைப்பாடுகள் மாவட்ட பொலிஸாரிடமிருந்து டெல்லி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பொலிஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அண்மைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐப்பசி 4, 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அண்மைய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஐப்பசி 4, 2026
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உலகம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
உலகம்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது
உலகம்

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்
உலகம்

மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

கிரிஷ்’ விவகாரம் – நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் பா.உ.நாமல்

6 நாட்கள் முன்னர்
யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

6 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்

நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check