EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் பாடசாலையில் குழப்பம்: 78 மாணவர்கள் இடைநீக்கம்!

கியூபெக் பாடசாலையில் குழப்பம்: 78 மாணவர்கள் இடைநீக்கம்!

ஐப்பசி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கின் செயின்ட்-ஜெரோமில் (Saint-Jerôme) அமைந்துள்ள ‘ஈகோல் பொலிவேலன்ட் செயின்ட்-ஜெரோம்’ (École polyvalente Saint-Jérôme) உயர் பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதங்கள், குழப்பங்கள் மற்றும் சொத்துச்சேதங்களைத் தொடர்ந்து 78 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

‘ரிவியர்-டு-நோர்ட்’ பாடசாலைச் சேவை மையம் (CSSRDN) குறித்த 78 மாணவர்களையும் இந்த வாரம் முழுவதும் வகுப்புகளில் பங்கேற்காதவாறு இடைநீக்கம் செய்துள்ளதாக ரேடியோ-கனடா (Radio-Canada) செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவை மையத்தின் பணிப்பாளர் ரீன் பிரிஸன் (René Brisson), சம்பந்தப்பட்ட மாணவர்களின் செயல்களின் தீவிரம், அவர்களின் பங்களிப்பின் அளவு மற்றும் பெற்றோர் காட்டும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவது குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், மேலதிக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (16.10.2026) மதிய உணவு இடைவேளையின் போது, ஏழாம் மற்றும் எட்டாம் தர மாணவர்கள் ஓடியும், குப்பைத் தொட்டிகளை வீசியும், கூட்டமாகத் திரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அன்றைய நாளின் இறுதியில் அவசர தீயணைப்பு மணி அடிக்கப்பட்டதுடன், சொத்துச்சேதங்களும் விளைவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையின் 3,400 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதிபர் நதாலி பிளமண்ட் (Nathalie Flamand) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மாணவர்களின் இத்தகைய சீர்குலைவு மற்றும் ஒழுங்கற்ற நடத்தைகளை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மாணவர்களின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காகத் திங்கட்கிழமை (19.10.2026) வகுப்புகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து மாணவர்களும் அடையாளம் காணப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை (20.10.2026) முதல் பாடசாலையினுள் பாதுகாப்புக் காவலர்களும், வெளியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதுடன், இடைவேளைகளின் போது கண்காணிப்பை அதிகரிக்கப் பணியாளர்களின் கால அட்டவணைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் பாடசாலைகளில் இடம்பெற்ற போராட்டங்கள் போன்ற அழைப்புகள் மாணவர்களின் சமூக வலைதளங்களில் உலா வந்தபோதிலும், அதற்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும், பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதே மாணவர்களின் உடனடி நோக்கமா இருந்ததாகவும் ரீன் பிரிஸன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் துப்பாக்கிச் சூட்டில் நபர் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்
கியூபெக்

கியூபெக்கில் துப்பாக்கிச் சூட்டில் நபர் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

ஐப்பசி 22, 2026
வச்சோன் (Vachon) தொகுதிக்கான மறு எண்ணிக்கையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில்  Parti Québécois வெற்றி
கியூபெக்

வச்சோன் (Vachon) தொகுதிக்கான மறு எண்ணிக்கையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் Parti Québécois வெற்றி

ஐப்பசி 22, 2026
கியூபெக்

ஐப்பசி 22, 2026
கியூபெக்கில் புதிய ஆட்சி – நிதி நெருக்கடிக்குத் தீர்வு, சுதந்திர வாக்கெடுப்புக்குத் தயாராகும் பிளமொண்டன்
கியூபெக்

கியூபெக்கில் புதிய ஆட்சி – நிதி நெருக்கடிக்குத் தீர்வு, சுதந்திர வாக்கெடுப்புக்குத் தயாராகும் பிளமொண்டன்

ஐப்பசி 22, 2026
மேப்பிள் சிரப்பிற்கான தேவை அதிகரிப்பு – கியூபெக்கில் உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை
கியூபெக்

மேப்பிள் சிரப்பிற்கான தேவை அதிகரிப்பு – கியூபெக்கில் உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை

ஐப்பசி 21, 2026
கியூபெக்கின் 34ஆவது முதல்வராக பதவியேற்கும் பால் செயிண்ட் – பியர் பிளமொண்டன்
கியூபெக்

கியூபெக்கின் 34ஆவது முதல்வராக பதவியேற்கும் பால் செயிண்ட் – பியர் பிளமொண்டன்

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

5 நாட்கள் முன்னர்
தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

6 நாட்கள் முன்னர்
மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

2 நாட்கள் முன்னர்
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check