ஹப்புத்தளை பகுதியில் இன்று (16) பெய்த மழை காரணமாக, ஹப்புத்தளை நகரின் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஹப்புத்தளை – தம்பேத்தன்ன வீதியில் கெல்பன் பகுதியில் இரண்டாவது கிலோமீற்றர் மைல்கல் அருகே மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததால் போக்குவரத்துச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.











