EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
போலி நூல்களைக் கண்டறிந்து அகற்ற தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்: இயக்குநர் சீனு ராமசாமி!

போலி நூல்களைக் கண்டறிந்து அகற்ற தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்: இயக்குநர் சீனு ராமசாமி!

கார்த்திகை 8, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

போலி நூல்களைக் கண்டறிந்து அகற்றும் அறம் சார்ந்த குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகப் பணிகள் தற்போதைய தவெக ஆட்சியில் நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை மூலம் இந்த நூலகத்தில் விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

‘கல் விளக்கு’ போன்ற சரிவர அறியப்படாத அல்லது முகவரி இல்லாத போலிப் பதிப்பகங்களிடம் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல போலியான ISBN எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூகவலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: “கோவை பெரியார் பொது நூலகத்தில் போலி நூல்களின் அணிவகுப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அதை ஆய்வு செய்யும் ஊடகத்துறையினர் பதிவிட்டு வருகிறார்கள். நூலகத் தேர்வுக் குழுவை உருவாக்கியது போல ‘போலி’ நூல்களைக் கண்டறிந்து அகற்றும் சிறந்த, அறம் சார்ந்த குழுவைத் தமிழக அரசு மாவட்டம் தோறும் உருவாக்கி, உடனடியாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை நூலகங்களிலும் ஆய்வு செய்து அங்கே இருந்துவரும் ‘போலி’ நூல்களை அப்புறப்படுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பொது நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழக அரசின் ஆவணக் காப்பகங்கள் என அரசு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவின் நூலகங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

மேலும் அப்படி ஒரு சூழல் உருவாகி இருப்பதை நினைத்து உள்ளத்தால் வருந்துகிறேன். ஒரு பெருமாள் முருகன் நூலகத்துக்குச் சென்றது போல ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்கள் நூலகங்களுக்குச் சென்று போலி நூல்களைக் கண்டறிந்து உதவும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச எம்மி விருது மேடையில் நடிகர் விஜய் சேதுபதி!
சினிமா

சர்வதேச எம்மி விருது மேடையில் நடிகர் விஜய் சேதுபதி!

கார்த்திகை 8, 2026
கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’
சினிமா

கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’

கார்த்திகை 7, 2026
முன்பதிவில் ரூ.4.33 கோடி வசூல் செய்த ‘சீன்!
சினிமா

முன்பதிவில் ரூ.4.33 கோடி வசூல் செய்த ‘சீன்!

கார்த்திகை 5, 2026
டைம் லூப் கதைக்களத்தில் உருவாகும் சந்தானத்தின் அதிசயபிறவி
சினிமா

டைம் லூப் கதைக்களத்தில் உருவாகும் சந்தானத்தின் அதிசயபிறவி

கார்த்திகை 4, 2026
சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது
சினிமா

சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது

கார்த்திகை 3, 2026
‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

4 நாட்கள் முன்னர்
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

6 நாட்கள் முன்னர்
பண்டாரவளை – ஹீல்ஓயா இடையேயுள்ள  ரயில் பாதையில் மண்சரிவு!

பண்டாரவளை – ஹீல்ஓயா இடையேயுள்ள ரயில் பாதையில் மண்சரிவு!

4 நாட்கள் முன்னர்
புளோரிடாவில் தனியார் விமான விபத்து!

புளோரிடாவில் தனியார் விமான விபத்து!

6 நாட்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check