மொன்றியலில் நேற்றையதினம் நடைபெற்ற ஹொக்கி போட்டியில், மொன்றியல் கனடியன்ஸ் அணி, மினசோட்டா வைல்ட் அணியிடம் மேலதிக நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் மினசோட்டா வீரர் குவின் ஹியூஸின் ஹாக்கி மட்டை உடைந்ததைத் தொடர்ந்து, மொன்றியல் வீரர் கோல் காஃபீல்டுக்கு எதிராக பெனால்டி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக கிடைத்த பவர் பிளே வாய்ப்பைப் பயன்படுத்திய கிரில் கப்ரிசோவ், வெற்றிக்கான கோலை அடித்தார்.
எனினும், நடுவரின் இந்தத் தீர்ப்பு தவறானது என மொன்றியல் அணியின் பயிற்சியாளர் மார்ட்டின் செயின்ட் லூயிஸ் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, போட்டிக்கு முன்னதாக முன்னாள் நட்சத்திர கோல்காப்பாளர் கேரி பிரைஸுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











