இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராக முன்னாள் இந்திய வீரர் ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தேர்வுக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் பிரக்யான் ஓஜாவுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய தேர்வுக்குழுவில் சிவ் சுந்தர் தாஸ், ஆர்.பி.சிங், அஜய் ராத்ரா மற்றும் ரமேஷ் பவார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரமேஷ் பவார், ஓய்வுக்குப் பின்னர் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், மும்பை மற்றும் குஜராத் அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.











