EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mullaithevu கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நாளை.

Mullaithevu கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நாளை.

ஆடி 3, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டப்பணிகள் நாளை (04.07.2024) ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மே மாதம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஜீலை மாதம் 04 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதற்கமைய மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் நாளைய தினம் இடம்பெற இருக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்த போது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வு பணிகளின் போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின் மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும் பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனிதப்புதை குழி அகழ்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீளவும் நாளைய தினம் CCTV கமரா, பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

புரட்டாதி 22, 2026
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு
அண்மைய செய்திகள்

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

புரட்டாதி 22, 2026
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

புரட்டாதி 22, 2026
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி
அண்மைய செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

புரட்டாதி 22, 2026
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

புரட்டாதி 22, 2026
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

4 நாட்கள் முன்னர்
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

முழங்காவில் கடற்கரையில் 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In