பெருந்தோட்ட துறை சார்ந்த தொழிலாளர்களுக்கான வேதனம் பற்றி அண்மையில் பேசப்பட்டிருந்தது. நாளாந்த வேதனமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இந்த வேதன முறைமையில் தமக்கு எவ்விதமான விருப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வேதன முறைமையினால் தொழிலாளர்கள் இனி போராட்டம் மேற்கொள்ளமாட்டார்கள் என்றில்லை, அவர்கள் வேதனத்தை அதிகரிக்க கோரி தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
இதன்படி நாளாந்த வேதனமாக 1700 ரூபாயை வழங்க வேண்டும் என அக்கரப்பத்தனை மற்றும் பொகவந்தலாவை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.











