EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mannar மடு பிரதேச செயலக கலை பண்பாட்டுப் பெருவிழா.

Mannar மடு பிரதேச செயலக கலை பண்பாட்டுப் பெருவிழா.

ஆவணி 22, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

சிறப்பாக இடம்பெற்ற மடு பிரதேச செயலக கலை பண்பாட்டுப் பெருவிழா.

மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா இன்று (22) வியாழக்கிழமை மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

மடு பிரதேச செயலாளர் கீ .பீட் .நிஜாகரன் தலைமையில் மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க .கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் ,வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வொலன்ரைன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9.15 மணி அளவில் விருந்தினர்கள் குடை கொடி ஆலவட்டம் கோலாட்டம் கும்மி, நடனம், பூரண, கும்பம் தாங்கிய மகளிர் மற்றும் தமிழ் வளர்த்த சான்றோர்களின் வேடப்புனைவாளர்கள் சகிதம் சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் மடு பிரதேச செயலாளர் தலைமையில் அமரர் செல்லன் மாதவன் அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் செல்வி ஜம்யுதா பூவிலிங்கம் நிகழ்த்தினார் .மூன்று கலைஞர்கள் நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தமது உரையில் கலை நிகழ்வுகளின் சிறப்பு பற்றியும் அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு நேர முகாமைத்துவம் கடைப் பிடிக்கப்பட்டமை தொடர்பிலும் பாராட்டி உரையாற்றினார்.

கலைஞர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலை மன்ற உறுப்பினர்கள் மாணவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாறான சிறப்பானதும் ஒழுங்கமைக்கப்பட்ட துமான விழா ஒன்றை மடு பிரதேசத்தில் காண முடிந்ததாக பலரும் கருத்து வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In