வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் பலி
வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் பலியாகியுள்ளதாக போகஸ்வெவ பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது இன்று காலை போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியிலே இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இக்கிரி பண்டார 53 வயதுடைய முதியவரே பலியாகியுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணை போகஸ்வெவ பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது











