யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2026” நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.
யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் சுயமரியாதை நடை எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றது.
சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி பலரும் கலந்துக் கொண்டனர்.











