EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

ஆனி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன்.

குறிப்பாக, பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர்.

ஆனால், இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும், இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸார் தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பௌதீக வளங்கள் மிகவும் அவசியமானவை. அந்தவகையில், நீண்டகாலத்தின் பின் இன்று அவர்களுக்குத் தேவையான நிரந்தரக் கட்டடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சந்திரசேகர் அவர்களும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம்.

அதன்போது, ‘கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள் ஆனால், நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்’ என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசாங்கம் ஒருபோதும் நிற்காது. இத்தகைய குற்றங்களை ஒழிப்பதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

ஆனி 15, 2026
ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
அண்மைய செய்திகள்

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

ஆனி 15, 2026
நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

ஆனி 15, 2026
வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் –  அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால
அண்மைய செய்திகள்

வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

ஆனி 14, 2026
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்
அண்மைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

ஆனி 14, 2026
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ஆனி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வடக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

வடக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

6 நாட்கள் முன்னர்
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

1 நாள் முன்னர்
டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

6 நாட்கள் முன்னர்
அச்சுவேலியில் தீயில் எரிந்த  பல ஏக்கர் புற்தரைகள்

அச்சுவேலியில் தீயில் எரிந்த பல ஏக்கர் புற்தரைகள்

1 நாள் முன்னர்
தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In