EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

ஆடி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து கம்பனிகளின் இணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் உசனிலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இப்புதிய சேவையின் சிறப்பம்சமாக, மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்குப் பிரத்தியேக ‘டிஜிட்டல் அட்டை’ ஒன்று வழங்கப்படும்.

மாணவர் பேருந்தில் ஏறி குறித்த டிஜிட்டல் அட்டையைத் தொடுதிரையில் காண்பித்தவுடனேயே, அவர் பேருந்தில் ஏறிய நேரம் உள்ளிட்ட விவரங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாகச் சென்றடையும்.

அதேபோன்று, மாணவர் பேருந்திலிருந்து இறங்கும்போதும் தொடுதிரையில் அட்டையைக் காண்பித்ததும், பாதுகாப்பாக இறங்கிய நேரத் தகவல் பெற்றோரின் தொலைபேசிக்குச் செல்லும். இதன் மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

மிகவும் முன்மாதிரியான இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை, தனியார் பேருந்தின் உரிமையாளரே தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் இரண்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மாகாணத்தின் ஏனைய இடங்களுக்கும் இந்த பேருந்துச் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்
அண்மைய செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 1, 2026
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை
அண்மைய செய்திகள்

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

ஆடி 1, 2026
முன்னாள் கலைப்பீடாதிபதி எஸ்.ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு
அண்மைய செய்திகள்

முன்னாள் கலைப்பீடாதிபதி எஸ்.ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு

ஆடி 1, 2026
யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்
அண்மைய செய்திகள்

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

ஆடி 1, 2026
சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு
அண்மைய செய்திகள்

சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

ஆடி 1, 2026
யாழில் இடம்பெற்ற வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்

ஆடி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

2 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

7 நாட்கள் முன்னர்
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

1 நாள் முன்னர்

6 நாட்கள் முன்னர்
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In