EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

ஆடி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜயை இன்று வெள்ளிக்கிழமை (3) சந்தித்து ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிததுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய பேரவை இன்று வெள்ளிக்கிழமை (3) ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளோம்.

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன்,

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சி;யின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர், தருமலிங்கம் சுரேஷ், அந்த கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ், கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஆடி 3, 2026
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

ஆடி 3, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆடி 3, 2026
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆடி 3, 2026
ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
அண்மைய செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ஆடி 3, 2026
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

ஆடி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

6 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

1 நாள் முன்னர்
ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

6 மணத்தியாலங்கள் முன்னர்
வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

6 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In