EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஆடி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியினுடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு, அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிய நிலையில் மீண்டும் இவ்வாறான தமிழ் கட்சிகள் ஒன்றினைவு வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும்

எனவே தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்வது காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்கு நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என அன்று கொண்டாடினார் அதற்கு அவருக்கு சொகுசு வீடு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என இலங்கை சுதந்திர தினத்தில் இலங்கைக்கு சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என்று இன்று கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடி தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும், தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்பி தேர்தல் வரும்போது கூட்டுச் சேருவதும் கூட்டினைவதும் தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.

அதன் பின்னர் தமிழ் மக்களின் இருப்பு தான் கிழக்கு மாகாணத்தில் கேள்விக்கறியாக்கப்படுகின்றது.

எனவே இந்த ஆறு கட்சிகளுடைய கூட்டுச் சேர்வினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள் .

இந்த கூட்டுச் சேர்வு வடக்கு மாகாணத்தை படிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக இது பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.

நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள் அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள். காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்
அண்மைய செய்திகள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

ஆடி 15, 2026
மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்
அண்மைய செய்திகள்

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

ஆடி 15, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

ஆடி 15, 2026
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்
அண்மைய செய்திகள்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

ஆடி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

5 நாட்கள் முன்னர்
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

4 நாட்கள் முன்னர்
21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

6 மணத்தியாலங்கள் முன்னர்
மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு  பெரிதும் பாதிப்பு

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In