நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதுவரைக்கும் 73,455 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 50 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இதில் நேற்றையதினம் மாத்திரம் 1025 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் பதிவாகியுள்ளது.
இதன்படி மேல் மாகாணத்தில் 38,700 பேர் பதிவாகியுள்ளனர். மாவட்ட அடிப்படையில் கம்பஹாவில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹாவில் 15,341 பேரும், கொழும்பில் 14,625 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தை பொறுத்தவரைக்கும் 21,538 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.











