EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

புரட்டாதி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒரு ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்பு வதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவராக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம்; செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் நியமிக்கப்பட்டனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம். இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த அரசியல் செயற்பாடுகளும் இல்லை இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச திணைக்களங்கள் லீவு நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடு வில் அமைந்துள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் மதுபானங்களை எடுத்து கொண்டு வந்து அருந்திவிட்டு நிறை வெறியில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர் இது வீதியில் பயணிக்கும் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் செயல்.

எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான சில அரச திணைக்கள ஊழல் மோசடி அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்

இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது இதனை தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.

எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதை பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள் பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி. போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிசாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கவும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணியில் இடம்பெற்ற குமாரசாமி கிருசாந்தியின்  30 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இடம்பெற்ற குமாரசாமி கிருசாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 7, 2026
கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்
அண்மைய செய்திகள்

கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்

புரட்டாதி 7, 2026
யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி
அண்மைய செய்திகள்

யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

புரட்டாதி 7, 2026
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை
அண்மைய செய்திகள்

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

புரட்டாதி 7, 2026
யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
அண்மைய செய்திகள்

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புரட்டாதி 7, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

2 நாட்கள் முன்னர்
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

1 நாள் முன்னர்
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

3 நாட்கள் முன்னர்
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In