EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

புரட்டாதி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், குறித்த மரங்களையும், பலகைகளையும் அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மூன்று தேக்கு மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த காணியானது பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும், சமூக பணிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், குறித்த காணி எல் ஆர் சி காணியாகவே காணப்படுவதாக பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

அக்காணியில் அரசின் அனுமதியின்றியும், உரிய அனுமதிகள் பெறப்படாமலும் சட்ட விரோதமாக மூன்று தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்ட அரச செயலகங்கள், கிராம சேவையாளர் ஊடாக அறிக்கையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, அரச காணியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் மற்றும், பலகைகளை அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறும், வெட்டப்பட்ட மரங்களிற்கு பதிலாக மரங்களை நாட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மேற்படி மரங்கள் விற்பனை நோக்கங்களிற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது. வெட்டப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளர் சதீஸ் டானியல், சொத்து அலுவலர் உள்ளிட்டோர் வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன நிர்வாகிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகின்ற போதிலும், மேற்குறித்த இருவரும் 17.07.2026 அன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டமைக்கான ஆதாரங்கள் கெிடைத்துள்ளது.

குறித்த தினத்தன்று மேற்குறித்தவர்கள் அப்பகுதிக்கு சென்று மதிப்பீடு செய்த பின்னர் உணவருந்தியமைக்கான பற்றுச்சீட்டை திருச்சபை நிர்வாகிகளிடம் வழங்கியமை வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 200 வருடம் பழமைவாய்ந்த வேம்பு இதேபோன்று சட்ட விரோதமாக வெட்டப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், வெட்டப்பட்ட மரங்கள் விற்பனைக்காக தயாராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் திருச்சபை மக்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை காணப்படுவதுடன், இயற்கையை நேசிப்பவர்களும் கவலையை வெளியிடுகின்றனர். இயற்கைகள் அழிக்கப்படுவதன் காரணமாக உலகளாவிய ரீதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதிக வெப்பமான நிலையும் காணப்படுகின்றது.

இந்த சூழலில், பொறுப்பு மிக்க சமய நிறுவனங்கள் இவ்வாறு இயற்கையை அழிப்பதுடன், சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றமையானது அவர்களின் பொறுப்பற்ற செயலையே காண்பிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்
அண்மைய செய்திகள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

புரட்டாதி 5, 2026
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 5, 2026
யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா
அண்மைய செய்திகள்

யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

புரட்டாதி 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

புரட்டாதி 5, 2026
மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
இலங்கை

மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

2 நாட்கள் முன்னர்
இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

5 நாட்கள் முன்னர்
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

5 நாட்கள் முன்னர்
மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In