EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

புரட்டாதி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.

நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை ‘திருடர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்தார்.

இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்.

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது. ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார். அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

புரட்டாதி 7, 2026
குமாரசாமி கிருசாந்தியின்  30 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

குமாரசாமி கிருசாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 7, 2026
கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்
அண்மைய செய்திகள்

கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்

புரட்டாதி 7, 2026
யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி
அண்மைய செய்திகள்

யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

புரட்டாதி 7, 2026
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை
அண்மைய செய்திகள்

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

புரட்டாதி 7, 2026
யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
அண்மைய செய்திகள்

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

2 நாட்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

5 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுத் தூபி

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி

5 நாட்கள் முன்னர்
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In