கடந்த 2020ஆம் ஆண்டு விமானங்கள் கொள்வனவு செய்வது தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











