காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாலன் முகுந்தன் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதுடன், இன்றைய தினமே காரைநகர் பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.











