சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் எதிர்கால நிர்வாகம் மற்றும் முக்கிய கொள்கைகளைத் தீர்மானிக்கும் வகையிலான இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணிக்குத் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எதிர்க்கட்சிகள் தேவையான பெரும்பான்மை இடங்களை உறுதி செய்துள்ளன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணிக் தலைவர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தேர்தலில் அடைந்த பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளதுடன், புதிய அரசுக்குத் தேவையான அதிகாரப் பகிர்வு நடைமுறைகள் முறைப்படி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











