அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் ஈரான் தனது தெளிவான நிலைப்பாட்டை அமெரிக்காவிற்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் தொடர்பில் தெளிவான செய்தியை அமெரிக்க நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் விதித்துள்ள இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்ற சமிக்ஞையை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரான் முன்வைத்துள்ள அந்த 7 நிபந்தனைகள் எவை என்பது குறித்தோ அல்லது இது தொடர்பில் அமெரிக்க தரப்பிலிருந்து வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ பதில்கள் குறித்தோ விரிவான தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் இந்த நிபந்தனைகள் சர்வதேச அளவில் முக்கிய அவதானத்தைப் பெற்றுள்ளன.











