EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

புரட்டாதி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒரே வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு முன்பாகவும், காந்தி சிலைக்கு அருகிலுமாக இரு கட்சிகள் தனித்தனியான நினைவேந்தல் செய்தனர்.

காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி க்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழரசு கட்சி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ. அமலநாயகி, மாநகரசபை உறுப்பினர் ஜெயந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபச்சுடரேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

அதேவேளை, காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அருகில், மட்டக்களப்பு மாநகரசபை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முதல் முறையாக தியாக தீபம் திலீபனின் 39 வது மற்றொரு நினைவேந்தல் மட்டு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் வைத்தியர் இ. சிறிநாத், முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், பிரதேச சபை தவிசாளர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வழக்கமாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டு வரும் இந் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக, மாநகரசபையினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இம்முறை தனியாக நினைவேந்தல் ஏற்பாடு செய்து ஏட்டிக்கு போட்டியாக நடத்தியமை குறித்து புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்
அண்மைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

புரட்டாதி 26, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்

புரட்டாதி 26, 2026
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்
அண்மைய செய்திகள்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

புரட்டாதி 26, 2026
ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை

ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புரட்டாதி 26, 2026
பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

புரட்டாதி 26, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
அண்மைய செய்திகள்

பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது!

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check