மதம் மற்றும் பெயரை மாற்றிக்கொண்டு, வெளிநாடு செல்லும் நபர்களுக்கு உதவும் முகவரகத்தின் இடைத்தரகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 10 மாதங்களாக தங்கியிருந்ததாகக் கூறப்படும், பசறை – மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 பெறுமதியான போதைப்பொருள் பொதிகளை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 12 கிராம் போதைப்பொருளை சிறு பொதிகளாக மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றபோது, பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











