நாட்டில் மழையுடனான வானிலை நிலவுகின்றமையால் அடுத்த 24 மணித்தியாலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து திருக்கோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது.
மேலும் காற்று மற்றும் கடல் நிலைமையை பொறுத்தவரை காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 20 தொடக்கம் 30 Km வேகம் வரை காணப்படும்.











