ஹல்தும்முல்லை வரலாற்றுச் சிறப்புமிக்க சொராகுணே சிறு கதிர்காம தேவாலயத்தில் குறைபாடாக இருந்த ஓய்வுமண்டபம், ரூ. 3 கோடி செலவில் இருமாடிக் கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழா ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய ஊவா மாகாண ஆளுநர், தற்போதைய அரசாங்கம் ஆலயங்கள் உள்ளிட்ட சமய வழிபாட்டுத் தலங்களுக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.











