EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பான சமூக வலைத்தள அவதூறு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று திங்கட்கிழமை, ஒக்டோபர் 12ஆம் திகதி, பதில் நீதவான் விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த நபர்கள் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்குத் தடை விதித்து, கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்றைய விசாரணையின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட சில எதிர்தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். இந்த வழக்கை விசாரித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா என்பது தொடர்பிலும் அவர்கள் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான லக்சான் டயஸ் மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆகியோரும் முன்னிலையாகினர்.

இதன்போது, நீதிமன்றில் ஆஜராகாத நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய மூவரையும் நவம்பர் 2ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு அடுத்த தவணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இந்த வழக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு அல்ல என்றும், வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அவதூறுப் பதிவுகள் தொடர்பான வழக்கே என்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

ஐப்பசி 13, 2026
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

ஐப்பசி 13, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

ஐப்பசி 13, 2026
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்
அண்மைய செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

ஐப்பசி 13, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

5 நாட்கள் முன்னர்
வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

1 நாள் முன்னர்
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

3 நாட்கள் முன்னர்
வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check