யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை (07.10.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 390 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











