மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை (14.10.2026) நடைபெற்றபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இருமடங்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், மத்திய கிழக்கு போர்ச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை எழுந்துள்ளதாகவும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சில திட்டங்கள் அடுத்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறினார்.
எனவே, அனைத்துத் திணைக்களங்களும் ஒன்றிணைந்து மக்களுக்குப் பயனளிக்குacம் வகையில் திட்டங்களைச் செயற்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.











