கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ‘ சுதந்திரத்துக்கான பாத யாத்திரை’, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாத யாத்திரையில் பங்கேற்றவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்தபோது, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்தி வந்த குறித்த குழுவினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிரித் பாராயணத்தில் ஈடுபட்டனர்.
ஆறாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரை, கடவத்தை நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பை வந்தடைந்துள்ளது.











